Gavitha / 2016 ஜூலை 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் இப்ராஹிம் முகமட் நசீர், தனது சேவையில் 40ஆவது ஆண்டை பூர்த்தி செய்துள்ளார்.
மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியிலும் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயத்திலும்; கற்றார். இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார். 1977ஆம் ஆண்டு மாவட்ட கஷ்டப் பிரதேச ஆசிரியர் நியமனத்தில் இணைந்துக் கொண்ட இவர், 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியினை பெற்று உடற்கல்வி ஆசிரியரானார்.
பின்னர் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயம், மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரி, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றினார். 1991ஆம் ஆண்டு சேவைக்கால ஆசிரியர் ஆலோசகராக பதவி உயர்வு பெற்று ஹட்டன் கல்வி வலயத்தில் கடமையாற்றினார். இவர் 1983, 1984ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் உடற்கல்வி ஆசிரியராக தனது பயிற்சியை முடித்தார். 1990ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தொலைக்கல்வி விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1995, 1999ஆம் ஆண்டுகளில் கலைமானி பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் முதுமானி பட்டப்படிப்பை முடித்தார். 2008ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றினார். 2011ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஹட்டன் கல்வி வலயத்தில் உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர் மஸ்கெலியாவைச் சேர்ந்த முகமட் இப்ராகிம் ருக்கியா பீபீ தம்பதியினரின் புதல்வராவார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago