Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 18 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
தைப்பொங்கல் பண்டிகைக்காக மலையகப் பகுதிகளுக்கு வருகைத் தந்த பெருமளவானவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட தமது தொழில் இடங்களுக்கு திரும்பிச் செல்ல போதிய போக்குவரத்து வசதியின்றி இன்று (18) ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
தலைநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து திரும்பிச் செல்ல போதியளவு தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடாமை காரணமாக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் டபிள்யு. ஜி.ஜே.கே. கீர்த்திரத்னவிடம் வினவியபோது,நேற்றிலிருந்து இன்று வரை கொழும்புக்கு 22 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
தைப்பொங்கலுக்காக மலையகப் பெருந்தோட்டங்களுக்கு வருகைத் தந்த பெரும்பாலானர்கள் ஒரே நாளில் திரும்பிச் செல்வதால் இவ்வாறு நீண்ட வரிசை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
47 minute ago
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
8 hours ago