Kogilavani / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஹட்டனிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
தொற்றுக்குள்ளான இருவரும் பொகவந்தலாவை, வலப்பனை ஆகிய பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, டிக்கோயா-கிழங்கன் வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.
மேற்படிப் பாடசாலையில், சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களின் நலன்கருதி பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக, பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 minute ago
40 minute ago
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
21 Jan 2026