Freelancer / 2025 ஜூலை 19 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையுடனான வானிலை காரணமாக ஹட்டன் - சமனலகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அக்குடும்பத்தினருக்கு ஹட்டன் - டிக்கோயா நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன், சமனலகல வீடமைப்பு பகுதி மண்சரிவு அபாயமிக்க பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சிலருக்கு ஹட்டனில் வேறு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது. R
12 minute ago
17 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
57 minute ago