2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஹரின் பெர்னாண்டோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, பாலித்த ஆரியவங்ச                                           

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரச வைத்தியர்களை அநாகரிகமான வார்த்தையைப் பிரயோகித்து பேசியமையை கண்டித்து, சுமார் 500க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

இதேவேளை, இவ்வார்ப்பாட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள் சிலரும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏட்டிக்குப்போட்டியாக நடத்தப்பட்ட இவ்விரு ஆர்ப்பாட்டங்களினால் சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் பதுளை நகரின் போக்குவரத்து  தடைப்பட்டிருந்தது. 

மேலும், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவு பொலிஸார் பதுளை நகரில் குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் தடுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தயார் நிலையில் இருந்தனர். வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பதுளை வைத்தியசாலை வளாகம் எங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .