2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தாக்க முற்பட்டவர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே. என்.முனாஷா)

அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நுளம்பு பெருக்க சோதனை நடவடிக்கைக்கு சென்ற உத்தியோகத்தர்களை வாளினால் தாக்க முயன்ற நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கட்டானை பிரதேச செயலகப் பிரிவிட்குட்பட்ட 93 ஈ  கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த  கிம்புலாபிட்டிய வீதியில் வசிக்கும் அஜித் குணசேகர என்பவரே  விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டானை பிரதேச செயலகப் பிரிவிட்குட்பட்ட 93 ஈ  கிராம சேவகர் பிரிவில் கட்டானை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார்,  விமான படையினர், இராணுவ வீரர்களை கொண்ட குழுவினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து டெங்கு நுளம்பு பெருக்க சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட நபரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த குழியில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை அகற்றுவதற்கு காலக்கெடு வழங்கிய போதே கோபம் கொண்ட சந்தேக  நபர் வாள் ஒன்றை எடுத்து அரசாங்க உத்தியோகத்தர்களை தாக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை அங்கிருந்த பொலிஸார் கைது செய்தனர். இதன்போது, சந்தேக நபரினால் பயன்படுத்தப்பட்ட வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X