Super User / 2011 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகரசபை உட்பட நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்காக தமது கட்சியின் அரசியற்குழு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் குமரகுருபரன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் , "எமது கட்சி போட்டியிடக்கூடிய உள்ளூராட்சி மன்றங்கள், போட்டியிடும் சின்னம், கூட்டணி சேர்த்துக்கொள்ளக்கூடிய ஏனைய அமைப்புகள் மற்றும் விசேடமாக கொழும்பு மாநகரசபை தொடர்பிலான எமது அணியின் முதன்மை வேட்பாளர் ஆகிய விடயங்கள் தொடர்பில் நடைபெறும் அரசியற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" எனக் கூறியுள்ளார்.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago