2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நிமல்லான்ஸா அமைப்பு 30 இலட்சம் ரூபா பெறுமதியான சுயதொலிலுக்கு தேவையான உபகரணங்களை இன்று வழங்கியது.

நீர்கொழும்பு மீனவ பெண்கள் அமைப்பு, நிமல்லான்ஸா அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்வு நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொதுச் சந்தை முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேல்மாகாண உல்லாசப் பயணத்துறை, வீதி அபிவிருத்தி அமைச்சர் நிமல்லான்ஸா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சுயதொலில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவினரால் நடத்தப்பட்ட அழக்கலை மற்றும் சிகையலங்கார பாடநெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கும் சுயதொழில் ஈடுபட்டுள்ள வசதி குறைந்த பெண்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

தையல் இயந்திரங்கள், சமையலறை உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், இலக்டரிக் அவன்கள், கேஸ் அடுப்புகள், டெங்கு ஒழிப்பு பற்றீரியா மருந்து வகைகள் என்பன இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X