Super User / 2012 ஜனவரி 17 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
கொழும்பில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் குற்றச்செயல்களை தடுக்கவும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிவதற்காகவும் மேலும் 100 கண்காணிப்பு கமெராக்களை பொருத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு 28 இடங்களில் 350 மில்லியன் ரூபா செலவில் 108 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒல்கொட் மாவத்தையிலுள்ள பொலிஸ் கட்டிடமொன்றில் விசேட பொலிஸ் குழுவொன்று இக்கமெராக்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்கிறது.
புதிதாக பொருத்தப்படவுள்ள கமெராக்கள் நபர்களின் முகங்களையும் வாகனங்களின் இலக்கத்தகடுகளையும் இனங்காணக்கூடிய வகையிலானதாக இருக்கும்.
குற்றச்செயல்களின் பின்னர் தப்பிச்செல்லும் கிரிமினல்களை இனம்காண்பதற்கு இக்கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago
Ahamed Wednesday, 18 January 2012 06:59 AM
போலீஸ் களஞ்சிய சாலையிலும் ஒரு காமரா பொருத்தவும்
Reply : 0 0
kundaanthady Thursday, 19 January 2012 01:19 PM
இந்த கேமரா ...லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களையும் பிடிக்குமா? அல்லது பொதுமக்களை மட்டும் தானா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago