2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு தலா 50 ரூபா அபராதம்

Super User   / 2012 ஜூன் 20 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                         (லக்மால் சூரியகொட)

நட்சத்திர ஹோட்டலொன்றில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட 11 நபர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தலா 50 ரூபா அபராதம் விதித்தது.

மேற்படி நபர்கள், குறித்த ஹோட்டலில் நிர்மாணத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஹோட்டல் வளாகத்திற்குள் அவர்கள் சூதாட்ட நிலையமொன்றை நடத்தியதாகவும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து நீதவான் கனிஷ்க விஜேரட்ன தலா 50 ரூபா அபராதம் விதித்தார்.


  Comments - 0

  • sooriyan Wednesday, 20 June 2012 04:29 AM

    550 ரூபா மொத்த அபராதம் ............... ?

    Reply : 0       0

    manithan Wednesday, 20 June 2012 07:20 AM

    ரூபா 50????. நாடு 19ஆம் நூற்றாண்டிலா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X