Super User / 2012 ஜனவரி 12 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி. பாருக் தாஜுதீன்)
சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழு அங்கத்தவரான பிரின்ஸ் கொலம் என்பவரின் மனைவியையும் மூத்த சகோதரியையும் ஜனவரி 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொட்டாஞ்சேனையிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புளூமெண்டால் வீதியிலுள்ள எம்.என்.எஸ். ஹோட்டலின் உரிமையாளரான நாகையா சசிகன் டிசமெ;பர் 26 ஆம் திகதி செய்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பிரின்ஸ் கொலமின் சகோதரிக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குமாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கி முனையில் மிரட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, டிசெம்பர் 27 ஆம் திகதி கப்பப் பணத்தை பெறுவதற்கு ஹோட்டலுக்கு வந்தபோது, அவர்களை புளூமெண்டால் பொலிஸ் காவலரணைச் சேர்ந்த பொலிஸார் கைது செய்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி ஹோட்டல் உள்ள இடத்தை பிரின்ஸ் கொலமிடமிருந்து 500 ரூபா தினசரி கொடுப்பனவிற்கு ஹோட்டல் உரிமையாளர் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பிரின்ஸ் கொலம் இறந்தபின் அவரின் சகோதரிக்கு இக்கொடுப்பனவு செலுத்தப்பட்டது.
பின்னர் அச்சகோதரியின் அறிவுறுத்தலின் பேரில் சமிந்த என்பவருக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. சமிந்த சுமார் ஒருவருட காலமாக பணத்தை பெறுவதற்கு வரவில்லை. கடந்த 26 ஆம் திகதி இருநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பணத்தை கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago