2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கட்டானையில் மினிசூறாவளி; 19 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(கே.என்.முனாஷா )


நீர்கொழும்பு, கட்டானை பிரதேசத்தில் வீசிய 'டோர்னடோ' மினி சூறாவளி காரணமாக 19 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

கட்டானை பிரதேசசபைக்குட்பட்ட (73 ஈ)  என்ற கதிரான கிராம அலுவலகர் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.40 மணியளவில் மினிசூறாவளி வீசியது. இதன் காரணமாக அனோமா வத்தையில் 16 வீடுகளின் கூரைகளும்;  டொன்டேவிட் மாவத்தையில் 3 வீடுகளின்  கூரைகளும் அள்ளுண்டுள்ளன. 

கம்பஹா மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிசாந்த சந்திரசிறி, கதிரான கிராம அலுவலகர் பிரான்ஸிஸ் குமாரசிங்கவும்  இன்று திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X