2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 93 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 25 பேர் பேருவளையில் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவத்தையின் நில்கோவாடியா பகுதியிலேயே இவர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஆள்கடத்தல் கும்பலின்  தலைவர் என கூறப்படுகின்ற பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் மொரட்டுவை சேர்ந்தவர் என அறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதியான கொஸ்கொடப் பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 68 பேர் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 2 பெண்களும் 3 சிறுவர்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். (குஷால் சமத்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X