Super User / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு -2 இலுள்ள லேக் ஹவுஸ் புக்சொப் எனும் புத்தக விற்பனை நிலையத்தில் புத்தகங்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று 26 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நபர் ஏற்கெனவே கொழும்பு பிரதம நீதவானினால் குற்றவாளியாக காணப்பட்டு இருவருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஒத்திவைக்கப்பட்ட தண்டனைக் காலத்திலேயே மீண்டும் குற்றமிழைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் இந்நபருக்கு மேற்படி இருவருட கடுங்காவல் தண்டனையுடன் புதிய குற்றத்திற்காக மேலும் 2 மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்குமாறு நீதவான் திருமதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார். அத்துடன் 3,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நபர் 3125 ரூபா பெறுமதியான புத்தகங்களை திருடியதாக மேற்படி புத்தகவிற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
mattran Wednesday, 03 August 2011 06:26 PM
என்ன வாழ்க்க இது ..........
Reply : 0 0
xlntgson Wednesday, 03 August 2011 09:36 PM
புத்தகங்கள் தானே என்று நினைத்ததற்கு நல்லா வேணும்!
Reply : 0 0
mohamed jaleel i Thursday, 04 August 2011 08:49 PM
இது தேவைதானா?
Reply : 0 0
tom Saturday, 06 August 2011 02:09 AM
திருடி அறிவைத் தேடுவோரை நாம் மதிப்போம்.
Reply : 0 0
xlntgson Saturday, 06 August 2011 09:40 PM
tom, umberella morals?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago