2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வெள்ளவத்தை வீட்டிலிருந்து 3 சடலங்கள் மீட்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று சனிக்கிழமை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே பகல் 1.230 மணியளவில் இச்சடலங்கள் மீட்கப்பட்டன.

56 வயதான நபர் ஒருவரும் 54 வயதான அவரின் மனைவியும்  20 வயதான அவரின் மகளுமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.  இவர்கள் கொட்டகலையை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சுவர்ணஸ்ரீ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X