2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

7 வாகனங்கள் மோதுண்டமையினால் 4 பேர் காயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹபீல் பாரிஸ்)


கொழும்பு கங்கராமய சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஏழு வாகனங்கள் மோதுண்ட விபத்தினால் நான்கு பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொம்பனி தெருவை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மோத, அது தன் பாதையிலிருந்து  விலகி திரும்புவதற்கு தயாரகியிருந்து முச்சக்கர வானத்துடன் மோதியுள்ளது என குறித்த விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து விட வாகனம் பாதசாரி ஒருவர் மற்றும் வேறு சில மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுடன் மோதி விழுத்தி ஒய்வு வந்தது. அப்போது, அதன் டயர்களில் காற்று இறங்கியிருந்தது. (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X