2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் உட்பட 6 பேர் நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏத்துக்கால  சுற்றுலாத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையிலிருந்த இம்மூன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் மற்றொரு தரப்பினருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் இவர்களில் ஒருவர் சிறிய காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகேயின் உத்தரவின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்களான கமல்,  ஜெயலத் ஆகியோரைக் கொண்ட பொலிஸ் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X