2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மேல் மாகாண சபை உறுப்பினர் துஷார பெரேராவுக்கு ஜுன் 7 வரை விளக்கமறியல்

Super User   / 2012 மே 24 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)

ஆனமடு, சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கோடீஸ்வர வர்த்தகரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் துஷார பெரேராவை, அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு ஆனமடு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மேல் மாகாண சபை உறுப்பினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 இன்று ஆனமடு நீதவான் நிதிமன்றத்தில் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஹேசாந்த த மெல் முன்னிலையில் இவரை ஆஜர்படுத்திய போதே, அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X