2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் ஆயுதங்களுடன் 8 பேர் கைது

Super User   / 2012 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதான வாயில் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் ஆயுதங்களுடன் நடமாடிய எட்டு பேரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னர்ணான்டோவினால் கொண்டு வரப்படவிருந்த பிரேரணை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவி;த்து, மாநகர சபையில் கொந்தராத்து அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, மாநகர சபையின் பிரதான வாயில் முன்பாக முச்சக்கர வண்டியொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் இருப்பதாக மாநகர சபையின் மண்டபத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து பொலிஸார் முச்சக்கர வண்டியை சோதனை செய்துள்ளனர். இதன்போது, அதில் கத்தி, வாள் மற்றும் தடிகள் என்பன இருந்துள்ளதை அடுத்து அங்கிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆளும் தரப்பை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் இருவரின் பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரிடம் வாக்மூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X