2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவேன்'

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்துவரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரசு நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்துவருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

'பூகோல செயற்பாடுகளில் இலங்கை - 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை' என்ற கருப்பொருளில் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கொள்கையில் தற்போதைய அரசாங்கம் மிகவும் தெளிவான நேர்மையான திறந்த ஒரு கொள்கையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய ஒளிவு மறைவுமின்றி எல்லா  அரசாங்கங்களுடனும் உள்ள உறவுகளையும் பலப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்தில் எந்த ஒரு அரச தலைவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்பதுடன், அவர்கள் எல்லோருடையவும் பொது நோக்கம் இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்டுத்தப்டுவதைக் காண்பதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்தினதும் நல்லாட்சியினதும் பெறுமதியை எமது நாட்டிலுள்ள சிலர் விளங்கிக் கொள்ளாத காரணத்தினால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எமது நாட்டின் எதிர்கால இருப்பு நல்லிணக்கத்தினதும் மற்றும் நல்லாட்சியினதும் பெறுமதியை யதார்த்தமாக்குவதன் மூலம் மட்டுமேயாகும் என்பதனை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உறவுகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகளை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த புலமைத்துவக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X