2026 மார்ச் 21, சனிக்கிழமை

பொதுச்சேவை ஆணைக்குழு அமைக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

பொதுச்சேவை ஆணைக்குழுவை அமைக்குமாறு சுகாதாரதுறை தொழிற்சங்கங்கள் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தன. பொதுச்சேவை ஆணைக்குழு கடந்த மூன்று வருடங்களாக அமைக்கப்படவில்லை என்று தெரிவித்த மேற்படி சங்கங்கள் இது சுதந்திரமான அரசாங்க சேவைக்கு அவசியமானது என சுட்டிக்காட்டுகின்றன.

முன்னைய பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2009இல் முடிவுக்கு வந்த அரசாங்க சேவை, அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரத்னபிரிய தெரிவித்தார்.

நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்று நடவடிக்கை ஆகிய விடயங்களில் அமைச்சர்களும் அமைச்சின் செயலாளர்களும் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார். எனவே பொதுச்சேவை ஆணைக்குழுவை நியமிக்கும்படி அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X