Super User / 2011 மார்ச் 07 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(டியென் சில்வா)
உலகளாவிய பிரச்சினைகளான பாதுகாப்பு, அணுவாயுத ஒழிப்பு, காலநிலை மாற்றம், மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் ஆகிய விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கு பிரேஸில் ஆர்வமாகவுள்ளதாக இலங்கைகு விஜயம் மேற்கொண்டுள்ள பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ. டி அகுயர் பட்ரியோட்டா இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளுக்கு மேலாக உலகளாவிய பிரச்சினைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைக்க நாம் விரும்புகின்றேம் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வணிக சமூகத்துடனும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடனும் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த 50 வருட காலத்தில் நிலவிய உறவுகளை இன்னும் ஐந்து வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரேஸிலிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இதன்போது அவர் உத்தியோகபூர்வமாக அழைத்தார்.
இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பாதுகாப்பு படை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்போருக்கு விசா விலக்களிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரேஸில் வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார்.
பொறியியல், துறைமுகம், சுரங்க தொழில் ஆகிய பலதுறைகளில் முன்னணி வகிக்கின்ற பிரேஸிலிடமிருந்து பொருளாதார ரீதியாக விரைந்து முன்னேற விரும்பும் இலங்கை நன்மையடையும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். Pix By: Pardeep Pathirana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago