Kogilavani / 2011 மார்ச் 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எச்.எம்.பௌஸான்)
அரசாங்கம் இன்று ஹம்பந்தோட்டை துறைமுகம் என்றும் அதன் பெருமை பற்றியும் பேரம் பேசித்திரிகின்றது. இத்துறைமுகத்தைக் கடந்து ஒரு நாளைக்கு 500 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்கின்றன. ஆனால் ஒரு படகு கூட இத்துறைமுகத்திற்கு வரவில்லை.
இலங்கையிலுள்ள விளையாட்டு மைதானங்களைப் போன்று இது வெறுமனே இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல் தடாகம் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மல்வானை நகரில் நேற்று மாலை ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று சுற்றுலாத்துறை பற்றி பேசுகின்றனர். காலி முகத்திடலுக்கு முன்னால் இருந்த இராணுவ தலைமையகம் சீனாவின் 'கதிக்' என்ற நிறுவனத்திறகு விற்கப்பட்டுள்ளது. இது ஒரு உல்லாச ஹோட்டல் சார்ந்த நிறுவனம் அன்றி விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம். ஏன் இவர்களுக்கு இது விற்கப்பட்டுள்ளது. இதில் என்ன நடைபெற்றுள்ளது? இதனால் யார் பயனடைகின்றனர்? என நாம் கேட்கின்றோம்.
இன்று அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலமாக மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. சமுர்த்தி போன்றவை இழக்க நேரிட்டுள்ளன.
இதுமட்டுமல்ல, 2500 ரூபா சம்பளம் உயர்வு எங்கே? ஆனால் அமைச்சர்களின் சம்பளம் 65000 ரூபாவில் இருந்து 165000 ரூபா வரை அதிகரித்துள்ளது. இன்று பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.ஆனால் சம்பளம், வருமானம் அதே நிலையில் தான் நிற்கின்றது.
இன்று இப்பிரதேசத்தில் என்ன அபிவிருத்திகளை நீங்கள் பார்க்கின்றீர்கள்? ஒன்றையும் காணமுடியாது. அன்று நான் செய்த அபிவிருத்திகள்தான் இன்றும் நீங்கள் இவ்வாறு இருக்கக் காரணம் என்றார்.
இப் பிரசார கூட்டத்தில் பியகம பிரதேச சபையின் முன்னால் தலைவரும் வேட்பாளருமான பிரசன்ன சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐ.தே.க.வின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் இம்டியாஸ் பார்க்கிர் மார்க்கா, பியகம தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ருவன் விஜயவர்தன, பியகம பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் வேட்பாளர் மொஹமட் இர்பான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago