A.P.Mathan / 2011 மார்ச் 12 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வெற்றி டி.வி., வெற்றி எப்.எம். ஆகியவற்றின் உரிமையினை 'யுனிவேர்ஸல் நெட்வோர்க்ஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பொறுப்பெடுத்திருக்கிறது. யுனிவேர்ஸல் நெட்வோர்க்ஸ் நிறுவனத்தின் தலைவராக விநாயகமூர்த்தி ஜனகன் இருக்கின்றார். வெற்றி டி.வி., வெற்றி எப்.எம். ஆகியவற்றின் நிகழ்ச்சி முகாமையாளராக ஏ.ஆர்.வி.லோஷன் இருக்கின்றார்.
இவர்களின் கூட்டு முயற்சியில் புதிய பரிணாமம் எடுத்திருக்கும் வெற்றி நிறுவனத்தினருக்கும் இலங்கையின் அச்சு ஊடகத்தினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்சிசையில் நடைபெற்றது. இலத்திரனியல் ஊடகமென்று தனித்திருக்காமல் அச்சு ஊடகத்தினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கி புதிய பாதையில் பயணிக்கவிருப்பதாக யுனிவேர்ஸல் நெட்வோர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜனகன் குறிப்பிட்டார்.
வெகுவிரைவில் முழு வீச்சுடன் 'வெற்றி' – ஊடகத்துறையில் வெற்றிக்கொடி நாட்டுமென லோஷன் குறிப்பிட்டார். வெற்றி நிறுவனத்தினரின் முக்கிய அங்கத்தவர்களையும் அச்சு ஊடகத்துறையின் முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம். Pix: Samantha Perera
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
41 minute ago
46 minute ago
4 hours ago
ஜனகன் சிவஞானம் Tuesday, 15 March 2011 02:42 AM
நிச்சயமாக வெற்றி வெற்றிக் கொடி நாட்டும்.....என்றும் வெற்றியோடு இணைந்திருப்போம்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago