A.P.Mathan / 2011 மார்ச் 14 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்குக் கீழான கைதொழில் அபிவிருத்திச் சபையினது செயல் திட்டங்களை வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதிதாக தொழில் முயற்சி மேம்பாட்டு முகாமையாளர்களுக்கு நியமனங்களை வழங்கியுள்ளார்.
அமைச்சரின் கொழும்பு அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கு கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் செயற்றிட்டங்களை மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பொருட்டு தொழில் முயற்சி மேம்பாட்டு முகாமையாளர் தரம் 5 பதவிக்காக ஒன்பது பேர் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இவர்களூடாக அந்தந்த மாவட்டங்களில் துறைசார்ந்த பல்வேறு தொழில் துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpg)
41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago