Menaka Mookandi / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஐக்கிய நாடுகள் செயலாளரினால் இலங்கை அரசுக்கு எதிராக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சர்வதேச நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களதும் பிரிவினைவாதிகளின் பலவந்தத்தின் பேரில் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையாகும்.' என தேசிய சுதந்திர முன்ணனி கட்சியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ முன் இலங்கை தொடர்பாக நியமித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த நாட்டின் தமிழ், சிங்களப் புதுவருடப் பரிசாக ஐனாதிபதி மஹிந்த ராசபக்ஷவுக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கு எதிராக இந்த நாட்டில் வாழும் சகலரும் ஒன்றினைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அணிதிரள வேண்டும். அத்துடன் இந்த நாட்டுக்காகவும் நாட்டினை கொடிய பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருப்போம்.
நேற்று புதன்கிழமை மாலை பிலியந்தலை, கருதியானு பிரதேசத்தில் 'வீரு' எனும் வீடமைப்புத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்வைபவத்தில் அமைச்சர் தொழிலமைச்சர் காமினி லொக்குகேயும் கலந்து கொண்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'இந்த உலகிலேயே கொடிய பயங்கரவாதியான வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த நாட்டில் ஜந்து தசாப்தங்களாக அநியாயமாக அப்பாவிப் பொதுமக்களையும் இந்த நாட்டின் சொத்துக்களையும் இயற்கை வளத்தையும் அழித்த வரலாறு இந்த உலகில் உள்ள மக்கள் ஒருபோதும் மறக்கவில்லை.
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி முதல் ஆர்.பிரேமதாச, காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி போன்ற பல புத்திஜீவிகளையும் பச்சை பச்சையாக நடு வீதியில் மனிதக்குண்டுகளைக் கொண்டு பிரபாகரன் கொலை செய்தார்.
அதுமட்டுமல்ல தமிழ்த் தலைவர்களான நீலன் திருச்செல்வன், துறையப்பா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்தவையெல்லாம் இந்த பான்கீ மூனுக்கும் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கும் அறவே தெரியாது போலும்.
இந்த நாட்டில் கொடிய பயங்கரவாதியை அழித்து நாட்டில் அமைதியை கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் இந்த நாட்டில் உள்ள சகல மக்களும் ஒன்று திரண்டுள்ளமைக்கு அண்மைக் காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் சான்று பகருகின்றன.
உலகில் சிறந்த தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை டைம்ஸ் பத்திரிகை தொட்டு உலக நாடுகளில் போற்றும்போது எந்தக் கோணத்தில் பான்கி மூன் இந்த யுத்த விரோத அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
41 minute ago
46 minute ago
4 hours ago
xlntgson Friday, 22 April 2011 08:27 PM
இங்கே வேறு விதமாக காணுகின்றேன், விமலின் பேச்சை! வேறு ஓர் இணையதளத்தில் ஐ நா உறுப்பினர்கள் புலிகளிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த அறிக்கை சமர்ப்பித்ததாக கூறி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago