Super User / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
மே தின நிகழ்வுகளையொட்டி நாளை நடைபெறவுள்ள கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மே தின பேரணிகளுக்காக எவ்.ஆர்.சேனநாயக்க வீதி, கிறீன் பாத் (பொதுநூலக சுற்றுவட்டம் ஹோர்ட்டன் சுற்றுவட்டம் வரை), பேஸ் லைன் வீதி (தெமட்டகொடை சந்தி முதல் பொரளை சந்திவரை) பாக் வீதி (பார்க் வீதி முதல் இசிபத்தன வீதி சந்திவரை) மூடப்பட்டிருக்கும்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேரணியில் கலந்துகொள்ள கண்டி விதியூடாக வருபவர்களின் வாகனங்கள் டீன்ஸ் வீதி, சுதுவெல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என மேல் மாகாண போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலக்க தெரிவித்தார்.
இப்பேரணிக்காக காலி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதியூடாக வரும் வாகனங்கள் கீறீன் பாத் பகுதியில் நிறுத்திவைக்கப்பட வேண்டும்.
ஹைலெவல் வீதி, கடுவெல வீதியிலிருந்து வரும் வாகனங்கள் றீட் அவெனிவில் நிறுத்திவைக்கப்பட வேண்டும். பிலியந்தல –கெஸ்பேவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் முறை சுதந்திர சதுக்கத்திலும் மெயிட்லன்ட் கிறசன்ட் பகுதியிலும் நிறுத்தப்பட வேண்டும்.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊர்வலத்திற்காக வரும் வாகனங்கள் ஆர்னோல்ட் ரட்னாயக்க மாவத்தை மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் நிறுத்திவைக்கப்பட வேண்டும்.
ஜே.வி.பி.யின் மே தின ஊர்வலத்திற்காக வரும் வாகனங்கள் இசிபத்தன வீதி, பார்க் லேன், சரணங்கர வீதி, பாமன்கட வீதி, ஹைலெவல் வீதி, மாயா சுற்றுவட்டம் ஆகியவற்றில் நிறுத்தப்பட வேண்டும்.
41 minute ago
46 minute ago
4 hours ago
CIDDEEQUE Sunday, 01 May 2011 12:48 AM
விசேட போக்குவரத்து ஒழுங்குகள் என்றால், இதன் அர்த்தம், மே தினம் கொண்ட்டாடுவது என்பதுதானே! வருடத்துக்கு 163 special day உள்ளது. அனைத்தும் கொண்டாடப்படுவது srilanka வில்தான் தெரியுமா? எப்படி நாடு முன்னேறும். இந்த பதிவை பார்க்கும் நீங்கள் ஒரு govarmend officer ஆக இருந்தால், நாட்டின் மீது பற்று வைத்து, உங்களுடன் வேலை புரியும் நண்பர்களுடன் நாட்டைப் பற்றி அக்கறை கொள்ளும் படி உணர்த்துவீராக! இது எனது அமானிதம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago