Kogilavani / 2011 மே 19 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
சட்டத்துக்கு மாறான குடிவரவு, மக்களை விமானம் மூலம் கடத்துதல் ஆகியவை தொடர்பில் நடைபெறும் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை பகிர்தல், போல ஆவணங்களை கண்டுபிடித்தல் தொடர்பில் ஒத்துழைத்தல் தொடர்பான சர்வதேச செயலமர்வொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்த செயலர்வை இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து ஒழுங்கு செய்தன.
இதன்போது ஆப்கானிஸ்தான், பர்மா, கனடா, இந்தியா, இந்தோனிஷியா, மலேஷியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகரலாயம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மக்களை கடத்துதல், சட்டத்துக்கு புறம்பான குடிவரவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்தனர்.
சட்டவிரோத குடியேற்றமும் மனிதக் கடத்தலும் பூகோள பிரச்சினையாக உள்ளதாகவும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பின்றி இதை தடுக்க முடியாது எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இச்செயலமர்வில் தெரிவித்தனர்.
41 minute ago
46 minute ago
4 hours ago
Hari Saturday, 28 May 2011 12:35 AM
என்னை ஒருவர் லண்டன் அனுப்புவதாக சொல்லி ஏமாற்றினார். இவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா? அப்படிஎன்றால் எங்கு, யாரிடம் முறையிடுவது? லண்டன் வதிவிட உரிமை பெற்ற இவர் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இலங்கை வந்து இப்படி ஆட்களை ஏமாற்றுவது இவரின் தொழில்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago