Super User / 2011 மே 24 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்திற்கு எதிராக கட்டுநாயக்க – நீர்கொழும்பு ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக சுமார் 350 விமானப்படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொங்கிறீட் தூண்களை பயன்படுத்தி ரயில் பாதையை மறித்தனர்.
இந்த இந்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சற்று நேரத்திற்குமுன் பொலிஸாருடன் உடன்பாடொன்றுக்கு வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் ஆனால், ஆர்ப்பாட்டக் காரர்கள் கொங்கிறீட் தூண்களை மூலம் ரயில் பாதையை மறித்து, ரயிலை விட்டு இறங்குமாறு பயணிகளை வலியுறுத்தினர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago