Kogilavani / 2011 மே 28 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பியகம, பட்டிவில, யபரலுவ, மல்வானை, ரக்ஷபான போன்ற பகுதிகளை அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் டுலிப் விஜேசேகர இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.
வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
பியகம பிரதேச செயலாளர் பிரிவினர் மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாகவும் வெள்ளத்தில் மூழ்கி உள்ள வீடுகள் மற்றும் ஏனைய இழப்புகள் தொடர்பாகவும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
.jpg)
.jpg)
41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago