Super User / 2011 மே 31 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனாநாயக்க)
கொழும்பிலுள்ள அரசாங்கக் கட்டிடங்களைச் சூழவுள்ள மதில்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. மக்களுக்கும் சுற்றாடலுக்கும் நட்பான வகையில் இக்கட்டிடங்களை வைத்திருப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமில் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
முதல்கட்டமாக பொலிஸ் நிலையக் கட்டிடங்களின் மதில்கள் அகற்றப்படுகின்றன. இதனால் அவ்வளாகங்களிலுள்ள புற்தரைகள் தென்படக்கூடியனவாகஉள்ளன. இது சுற்றாடலுக்கு மேலும் நட்பான நகரமாக்கும் ஒரு நடவடிக்கையாகும் என அவர் கூறினார்.
பாதுகாப்புச் செயலாளரினதும் நகர அபிவிருத்தி அதிகார சபையினதும் பூங்கா நகரக் கொள்கைக்கு இணங்க இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பு மாநகர சபை இதற்கு உதவுகிறது எனவும் ஒமர் காமில் தெரிவித்தார்.
கொழும்பு வீதிகளின் மத்தியிலுள்ள புற்தரைகளில் மரக்கறிகளை வளர்ப்பதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


41 minute ago
46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago
4 hours ago