Super User / 2011 ஜூன் 27 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதீம் ஸுபைர்)
நடைபெறவுள்ள அத்தனகல்ல பிரதேச சபை தேர்தலில் இம்முறை திஹாரிய முஸ்லிம்களின் அதிகமான வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும் என அத்தனகல்ல ஐ.தே.க. அமைப்பாளர் சந்ரசோம சரணலால் தெரிவித்தார்.
நேற்று திஹாரியில் வேட்;பாளர் மொஹமட் அஷ்ரப்பை ஆதரித்து இடம்பெற்ற ஐ.தே.க தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த தேர்தல்களில் திஹாரிய முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கே கிடைத்தது. ஆனால் இம்முறை அதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதனால் ஐ.தே.கட்சிக்கே அனைத்து வாக்குகளும் கிடைக்கும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸப் மைக்கல் பெரேரா, மத்திய மாகாண சபை ஐ.தே.கட்சி உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago