Super User / 2011 ஜூன் 28 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட தென்னிலங்கை மாவட்டங்களை சார்ந்த தமிழ் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சவார்த்தை நடத்தவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜுலை 4ம் திகதி நடைபெறவுள்ள இச்சந்திப்பின் போது தலைவர் மனோ கணேசனுடன் இக்குழுவில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கான முன்னணியின் பொறுப்பாளர்களும் இடம்பெறவுள்ளனர்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு இல 72, பாங்ஷால் வீதி, கொழும்பு 11 ல் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி தலைமையகத்தில் நடைபெறும். இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தற்சமயம் நடைமுறையாகிவரும் வாக்காளர் பதிவு சம்பந்தமாக தாம் எதிர்நோக்கும் அசௌகரியங்களை அறிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago