Menaka Mookandi / 2011 ஜூலை 04 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து செயற்படுத்தும் இளைஞர் நாடாளுமன்ற ஆரம்ப அமர்வும், நிறைவேற்றுச் சபை பற்றிய தெளிவுப்படுத்தல் கருத்தரங்கும் எதிர்வரும் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
16ஆம் திகதி இளைஞர் நாடாளும்ற ஆரம்ப அமர்விற்கு பிரதம அதிதியாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, கௌரவ அதிதிகளாக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இளைஞர்களுக்கா நாளைய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்றைய தினம் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் எடுப்பதோடு, நாடாளுமன்ற அமர்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago