Super User / 2011 ஜூலை 07 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை பிரதேசத்தில் இன்று பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பாதாள உலகக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் இதில் ஒருவர் பலியானதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேற்படி குழுவினர் சடலத்தை நாகொடை வைத்தியசலையில் விட்டுவிட்டு காரொன்றில் தப்பிச் சென்றிருப்பதாகவும் அவர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை மாகல்கந்த பகுதியில் சந்தேக நபர்களின் காரொன்றை பொலிஸார் மறித்தபோது இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கார் அண்மையில் மஹரகமயில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (SD)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago