Menaka Mookandi / 2011 ஜூலை 08 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இத்திடீர் மறைவானது தமிழுலகிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'பேராசிரியர் சிவத்தம்பியை எனக்கு ஒரு வயது மூத்த மாணவனாக, கொழும்பு ஸாகிரா கல்லூரியின் தமிழ் மனறத் தலைவராக இருந்த காலம் தொடக்கம் அறிமுகமானார். அக்காலத்திலேயே அவர் ஸாகிரா கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரால்; மிகவும் மதிக்கப்பட்டும் விரும்பப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். அப்போது அக்கல்லூரியின் அதிபராக இருந்தவர் பின்னர் செனட் சபை உறுப்பினராகவும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்த ஜனாப் ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆவார்.
அதிபர் அஸீஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட ஊக்கத்தின் காரணமாக அவர் பாடசாலை நாட்களில் பல விழாக்களை ஒழுங்கு செய்தார். அவற்றில் இன்றும் என்னால் நினைவு கூரத்தக்க ஒன்று அப்பொழுது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் சஞ்சிகையான கல்கி வார இதழின் ஆசிரியரான கிருஸ்ணமூர்த்திக்கு கொடுக்கப்பட்ட பெரு வரவேற்பு நிகழ்வாகும். அன்று தொட்டு அவருடனான உறவானது பல ஆண்டுகாலம் நீடித்து நின்றது.
அவருடைய வகுப்பு தோழர்களாக தினகரன் தமிழ் தினசரியின் பிரதம ஆசிரியராக பதவிவகித்த காலஞ்சென்ற சிவகுருநாதன் ரட்னநாதன், இடது சாரிக்கட்சியின் வாராந்திர சஞ்சிகையான தேசாபிமானியின் ஆசிரியராக விளங்கிய எச்.எம்.பி.மொகையதீன் மற்றும் றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின் யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்த கலாஞ்சென்ற கலாநிதி கைலாசபதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இலக்கிய சமூகத்துடன் இணைந்து அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களின் துன்பத்தில் நானும் பங்குகொள்ளும் இவ்வேளை, இவ்வாறான ஒரு தமிழ் அறிஞர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமிதம் கொள்ளுகின்றேன். அன்னார் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திக்கின்றேன்.'
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago