Super User / 2011 ஜூலை 12 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமகால இந்திய கற்கை நிலையத்தை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்ப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தர் போரசிரியர் ஹஷினகா ஹிறும்புறேகம ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்னிலையில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்திற்கினங்க 56.50 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்ப்படவுள்ளது. இந்த நிதியின் ஊடாக சமகால இந்திய கற்கைகளுக்காக நிலையம், நூலகம், கணனி வள நிலையம் என்பன அமைப்பக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாகா இந்திய அரசாங்கத்தினால் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான உதவிகளும் வழங்கப்பட்டவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகமும் இந்த நிலையத்திற்கு தேவையான கல்வி, ஆராய்ச்சி மற்றும் உட்கட்டமைப்புக்கான வசதிகளையும் வழங்கவுள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட பிரகடணத்திற்கினங்கவே இந்த கற்கை நிலையம் அமைய பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago