Super User / 2011 ஜூலை 25 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகரவுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு தோல்வியில் முடிவடைந்ததாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு முக்கியஸ்தர் ஒருவர் தனது மனைவியை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியமையாலேயே இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது என அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இனிமேல் முஸ்லிம் கல்வி மாநாடு பிரதிநிதிகளை சந்திக்கமாட்டேன் என இதன்போது தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகரவுக்கும் இடையிலான மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பது வழமையாகும்.
இதேவேளை, வெற்றிடமாகாவுள்ள கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் பதவிக்கு பாகிஸ்தானிலுள்ள சார்க் மனித வள அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளரான கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
kulthuran Monday, 25 July 2011 08:26 PM
முக்கியஸ்தரின் மனைவிக்காக முஸ்லிம்களின் கல்வியை குட்டிசுவரக்குவதா ? நல்ல கதை அள்ளுவா? இத போய் தாருட்ட செல்லிய ?
Reply : 0 0
avathani Monday, 25 July 2011 08:53 PM
முஸ்லிம் தலைவர்களின் நிலைமை இப்படித்தான் உள்ளது. இவர்கள்தான் முஸ்லிம் சமூகத்துக்காக பாடுபடுவார்கள். வெட்கம், முஸ்லிம் தலைவர்கள் நிலைமை. எப்போது திருந்தும் முஸ்லிம் சமூகம்?
Reply : 0 0
xlntgson Monday, 25 July 2011 09:05 PM
உறவினரை நியமிக்கக் கோரினால், இப்படி கோரிக்கை விடுவது குற்றம் என்று சட்டம் செய்ய இயலாதா?
Reply : 0 0
சித்தீக் Monday, 25 July 2011 09:22 PM
சுயநலத்துக்காகச் சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்வாறானவர்களினாலேயே இன்று முஸ்லிம் சமூகம் இந்த நிலையை அடைந்துள்ளது.
Reply : 0 0
najeem@hotmail.com Monday, 25 July 2011 09:24 PM
இச்செய்தியை மக்களுக்கு வெளிக்கொண்டு வந்த தமிழ்மிரருக்கு மிக்க நன்றிகள்.
Reply : 0 0
Faazil Monday, 25 July 2011 09:53 PM
kudumba aatchi nadakkum intha naddil ithellam sahajam appa. viddidunge pleese.
Reply : 0 0
Ahamed Monday, 25 July 2011 11:18 PM
யார் அந்த கல்விமான் ????????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago