Super User / 2011 ஜூலை 29 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
கொழும்பு மாநகர சபைத் தேர்தலை உடன் நடத்தும்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆர்வலரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
'கொழும்பு மாநகர சபைக்காக இறுதியாக நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2006 ஆம் திகதி ஆரம்பமாகியது. மாநகர சபை கட்டளைச்சட்டம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச்சட்டம் என்பவற்றுக்கு அமைய கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் ஜூன் 2 2010 ஆம் திகதிக்கு முன் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago