Menaka Mookandi / 2012 ஜனவரி 06 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பதவியிலிருந்து விலகி வீடு செல்லாவிட்டால், ஜனாதிபதியின் தலையீட்டுடன் கைது செய்து சிறைக்கு அனுப்புவேன்' என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ள ஆர்.உதயகுமார் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை தான் பதவி பொறுப்பேற்கவுள்ள நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு அரசியல் தலையீடுகளுடன் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அதிபர் உதயகுமார் மேலும் தெரிவித்ததாவது,
'இரத்மலானை இந்துக்கல்லூரியில் நிலவிய அதிபர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக மேல்மாகாண கல்வி அமைச்சின் மூலமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அப்பதவி எனக்கு கிடைத்தது.
இருப்பினும் அப்பாடசாலையின் முன்னாள் அதிபர், அப்பாடசாலையில் சாதாரண ஆசிரியையாக கடமையாற்றி வந்த அவரது மனைவியிடம் அதிபருக்கான பொறுப்புக்களைக் கையளித்தார். அதிபர் தரமற்ற மேற்படி ஆசிரியை என்னிடம் பொறுப்புக்களைக் கையளிக்க மறுப்பு தெரிவித்ததோடு, அதிபர் அலுவலகத்தையும் மூடி வைத்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரிடமிருந்து எனக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இது குறித்து நான் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளேன்' என்றார்.
இதேவேளை, மேற்படி முறைப்பாடு தொடர்பாக கல்கிஸை பொலிஸ் நிலையத்திடம் தமிழ்மிரர் வினவியபோது, அவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், இரத்மலானை இந்துக் கல்லூரியின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago