Menaka Mookandi / 2012 ஜனவரி 09 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ள ஆர்.உதயகுமாரின் நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க – தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.
புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ளவர், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று அறவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கும் வரை அதிபரின் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
அத்துடன், தனக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு பொய்யானது என்றோ அல்லது, நியாயமற்றது என்றோ அறியப்படும் பட்சத்தில் குறித்த புதிய அதிபருக்கே நாளை செவ்வாய்க்கிழமை பாடசாலையின் பொறுப்புக்கள் கையளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய அதிபரின் மனைவி வேற்று மதத்தைச் சார்ந்தவராக இருப்பின் அது அதிபர் நியமனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபர் இந்துவாக இருக்க வேண்டும் என்பதே விதிமுறையாகும். அதனால் அவர் குறித்தே நாம் கவனம் செலுத்துவோம். இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது, புதிய அதிபரின் நியமனம் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும்' என்று முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
12 minute ago
34 minute ago
49 minute ago
1 hours ago
செம்பகம் Monday, 09 January 2012 08:45 PM
அப்ப அந்த அந்த பாடசாலைகளுக்கு அந்தந்த மதரீதியான அதிபர்கள் தானா வரவேண்டும்? அப்படியென்றால் தமிழ் பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்களோ அல்லது முஸ்லிம் ஆசிரியர்களோ கற்பிடிக்க முடியாது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
49 minute ago
1 hours ago