Super User / 2012 ஜனவரி 11 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொழும்பு கொம்பனித் தெருவில் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று 2500 ரூபா அபராதம் விதித்தார்.
வொக்ஷோல் வீதியைச் சேர்ந்த அப்பெண், அதே வீதியில் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அப்பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார், அவர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகவும் அவ்வீதியில் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினர்.
தன்மீதான குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, அவருக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன 2500 ரூபா அபராதம் விதித்தார்.
12 minute ago
34 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
49 minute ago
1 hours ago