2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

காதலியை குத்திவிட்டு நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற காதலன்

Super User   / 2012 ஜனவரி 14 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே. என்.முனாஷா)

காதலை மீண்டும் புதுப்பிக்க மறுத்த காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காதலன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கட்டுநாயக்க பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற காதலன் ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ஹேரத் முதியான்சலாகே சுலானி தம்மிகா ஹேரத் என்ற யுவதியே, அவரின் முன்னாள் காதலன் என கூறப்படுபவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டவராவார்.

இவர் கொலை செய்யப்பட்ட யுவதியின் முன்னாள் காதலன் என்று கூறப்படும் திஸ்ஸ மடகே தஹம் பிரியசாந்த (33வயது) என்பவர் நஞ்சருந்திய நிலையில் நீர்கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் குருணாகல சமகி மாவத்தை ,வந்துராகல பிரதேசத்தை சேர்ந்தவராவார். கொலை செய்யப்பட்ட பெண் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் தொழில் செய்பவராவார்.

இவர்கள் இருவருக்குமிடையில் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X