Super User / 2012 ஜனவரி 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு - தலாதுவ பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வீடொன்றில் இரகசியமான முறையில் விபசார நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து இன்று சனிக்கிழமை காலை பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'விபசார விடுதியை உடனடியாக அகற்று, பிரதேச மக்களின் கௌரவத்தை காப்பாற்று மற்றும் தலாதுவ பிரதேச மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தாதே' உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
இதனை அடுத்து பிரதேச மக்களுக்கும் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது.
இதேவேளை, குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்க செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களை இனந்தெரியாத நபர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
குறித்த பிரச்சினை பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டமையால், இது தொடர்பான செய்தியை வெளியிட வேண்டாம் எனவும் குறித்த குழுவினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
இதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு; இந்த செய்தியை வெளியிடுமாறும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago