Suganthini Ratnam / 2012 ஜனவரி 17 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலும் கிழக்கிலும் இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் விதவைகளான பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்திற்கு மேலும் பல உதவிகளை அவுஸ்திரேலியாவிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலியக்வின் பதில் உயர்ஸ்தானிகர் சொன்யா கோப்பேக்கும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கையில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இலங்கைக்கு ஒரு மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்துள்ளனர். எதிர்வரும் வருடங்களிலும் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகளின் வருகையினை 2015ஆம் ஆண்டுக்குள் நாம் எதிர்பார்க்கின்றோம். இதனது சமாந்தரமாக இலங்கையின் கைத்தொழில்த்துறையும் வளர்ச்சி கண்டுவருகின்றது.
இதனை மேலும் அபிவிருத்தி செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் அதிகரிப்பை ஏற்படுத்த அவுஸ்திரேலியா தமது பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் அவுஸ்திரேலியக்வின் பதில் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை, பாடசாலைகளுக்கான நிர்மாண வேலைகள், வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார மேம்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா நிதிப்பங்களிப்பை செய்துவருவதாக அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளை கவரும் தளமாக இலங்கை மாறிவருவதை அவதானிக்கமுடிவதாகவும் அவர் கூறினார்.
11 minute ago
33 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
48 minute ago
1 hours ago