Super User / 2012 ஜனவரி 19 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையின் நிதி தொடர்பான நிலையியல் குழுவுக்கு சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு பின் மீண்டும் ஆரம்பமாகியது.
சபையை கட்டுப்படுத்தும் முக்கிய குழுவான 6 அங்கத்தவர்கள் கொண்ட இக்குழுவுக்கு எதிர்க்கட்சியான ஐ.ம.சு. கூட்டமைப்பு தரப்பிலிருந்து நான்கு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இதையடுத்து. தமது உறுப்பினர்களின் வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். அதை ஐ.ம.சு.கூட்டமைப்பு நிராகரித்தது. (YP)
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago