Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 மார்ச் 14 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - 8 பொரளை குறுக்கு வீதியிலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்காக பாங்கு (அதான்) சொல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொரளை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட நம்பிக்கையாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.
இப்பள்ளிவாசலில் தொழுகைக்காக பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அத்துடன் பங்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஒலிபெருக்கிகளையும் பொரளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள் கழற்றி சென்றுள்ளமை நீதி அமைச்சரின் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த தடை தொடர்பாக பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோனிற்கு நீதி அமைச்சர் ஹக்கீம் கடிதம் எழுதியிருந்தார்.
குறித்த பள்ளிவாசலில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்காக பாங்கு சொல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் 6ஆம் திகதி அமைச்சர் ஹக்கீமிற்கு அனுப்பியுள்ள பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தினை மேற்கோள்காட்டியே நீதி அமைச்சர் ஹக்கீம் இதனை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றை கேட்டிருந்ததாகவும பொலிஸ் மா அதிபர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பள்ளிவாசலின் ஒலிபெருக்கிகளை பொரளை பொலிஸ் நிலையத்தால் கைப்பற்றப்படவில்லை. வேறு பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொரளை பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்காக பாங்கு சொல்வதற்காக ஒலிபெருக்கிகளை பாவிப்பதற்கு சட்டபூர்வமான தடை எதுவுமில்லை என்பதால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படாத வகையில் மேற்கொள்ளலாம் என அமைச்சர் ஹக்கீம் பொரளை ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
57 minute ago
2 hours ago