Kogilavani / 2012 மார்ச் 19 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸ் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பலியான தலவாக்கலையைச் சேர்ந்த பெண்ணுக்கும் காயமுற்றவர்களுக்கும் சேதமான சொத்துக்களுக்கும் உரிய நஷ்டயீடு பெற்றுக் கொடுப்பதற்கு இடர்முகாமைத்துவ அமைச்சினூடாக தான் ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
குப்பை அகற்றும் லொறியின் சாரதியின் கவன குறைவினால் ஏற்பட்ட விபத்தில் தலவாக்கலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தின்போது, சொத்துக்கள் சிலவும் சேதமாகியுள்ளன. இதை இடர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் திலிப் விஜேசேகரவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்ததாகவும் இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
மேலும் விபத்திற்கு காரணமாக இருந்த வாகனத்தின் ஸ்தாபனத்திடம் உரிய நஷ்டயீட்டை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago