Super User / 2012 மார்ச் 21 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சுபுன் டயஸ்)
கோட்டே ரஜமஹா விகாரையில் பௌத்த பிக்குகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு தனிப்பட்ட பகைமையே காரணம் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விசாரணைகள் நிலை குறித்து பொலிஸார் விபரங்களை வெளியிடவில்லை.
80 வயதான பிக்கு ஒருவரே கொலையாளிகளின் இலக்காக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரின் அறைக்குள் சத்தம் கேட்டு 60 வயதான பிக்கு ஒருவர் வந்தபோது அப்பிக்குவை கொலை செய்த நபர்கள், பின்னர் 80 வயதான பிக்குவை கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைகள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேற்படி விகாரையிலிருந்து நால்வர் வெளியே ஓடி காரொன்றில் ஏறுவதை விகாரையில் தங்கியிருந்த பாடசாலை மாணவனொருவர் கண்டதன் மூலமே இக்கொலைச் சம்பவம் குறித்த தகவல்கள் தெரியவந்தன.
அம்மாணவன் காரின் இலக்கத்தை (KM-5376) மணலில் குறித்துக்கொண்டதன் பின்னர் கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பின் பொலிஸாரும் பிரதேச வாசிகளும் மோப்பநாயை பின்தொடர்ந்து சென்றபோது, அந்நாய் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரு மாடிகளைக் கொண்ட வீடொன்றுக்கு சென்றது. அவ்வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் ஏனைய மூவரும் வாக்குமூலங்கள்பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹாதுடுவ நுழைவாயிலில் வைத்து மேற்படி காரிலிருந்த பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.படங்கள்:- நிஷால் பதுகே
.jpg)
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026