2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலையில் அமோனியா விசவாயுவை சுவாசித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

Menaka Mookandi   / 2012 மே 22 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

மீன் பதனிடும் தனியார் தொழிற்சாலையொன்றில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் வாயுக் குழாய் வெடித்ததில் கசிந்த அமோனியா வாயுவை உட்சுவாசித்து கடும் சுகயீனமுற்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஹேமலதா என்ற பெண்ணே இவ்வாறு மரணமானவராவார். 

நீ;கொழும்பு, தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள கடல் மீன்களை பதனிடும் தொழிற்சாலையில் கடந்த 15ஆம் திகதி தவறுதலாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஏழு பேர் சுகயீனமுற்ற நிலையில் நீகொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆறு பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய போதிலும் குறித்த பெண் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஏழு தினங்களின் பின்னர் நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

அமோனியா நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்தன் காரணமாக உடலின் உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X